மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

“பொய்… பொய்… முழுப்பொய் “ என்கிறார் மகிந்த

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலகத் தேவையில்லை என்று தாம் கூறியதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருப்பது முழுப் பொய் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

ரணிலைக் காப்பாற்றினார் மகிந்த – பதவி விலக வேண்டாம் என்று கோரிக்கை

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டாம் என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார்.

பதவி விலகுகிறார் சாகல? – ரணிலுக்கு ஐதேக முழு ஆதரவு

கூட்டு அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பது என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக் குழு இன்று முடிவு செய்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

நாளை முக்கிய அறிக்கையை வெளியிடுகிறார் சிறிலங்கா அதிபர்

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் தொடர்பாக,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை முக்கியமான சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐதேக அரசில் இணையாது கூட்டமைப்பு – சம்பந்தன்

ஐக்கிய தேசியக் கட்சியுடன், இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மைத்திரி- ரணில் சந்திப்பில் இணக்கப்பாடு – முடிவை எடுக்க சிறப்புக் குழு

தற்போதைய கூட்டு அரசாங்கத்தை எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பது தொடர்பாக, முடிவு செய்வதற்கான சிறப்புக் குழு ஒன்றை அமைக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நேற்றிரவு நடத்தப்பட்ட பேச்சுக்களில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதரவை விலக்கினால் சவாலை எதிர்கொள்வோம் – ஐதேக

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்காவிடின், அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி விடுத்துள்ள சவாலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

ரணிலை நீக்காவிடின் வெளியேறுவோம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி போர்க்கொடி

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்காவிடின், கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி எச்சரித்துள்ளது.

நாடாளுமன்ற கலைப்பு – மகிந்தவுக்கு சட்டம் தெரியாதா?

நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னர், அதனைக் கலைக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்பதை, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார் – மகிந்த ராஜபக்ச

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளத் தாம் தயாராகவே இருப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.