கூட்டமைப்பை புதுடெல்லி அழைக்கவில்லை – சுமந்திரன்
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக வெளியான செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக வெளியான செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்போம் என்று சூளுரைத்துள்ள எதிரணித் தலைவர்களான சம்பிக்க ரணவக்க, சஜித் பிறேமதாச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளனர்.
ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும் ‘எஸ்பொ’ என தமிழிலக்கிய உலகில் அறியப்பட்டவருமான எஸ்.பொன்னுத்துரை அவர்கள் இன்று [26-11-2014] அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் காலமானார்.
யாழ்.மாவட்டத்தில் மதுப்பாவனை கடுமையாக அதிகரித்திருப்பதாகவும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் லிட்டர் மதுபானம் நுகரப்படுவதாகவும், அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது மதுவரித் திணைக்களம்.
சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் தாமும் வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளதாக, சோசலிச சமத்துவக் கட்சி அறிவித்துள்ளது.
வரும் 27ம் நாள் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், விடுதலைப் புலிகளை மகிமைப்படுத்தும் நினைவு கூரல் நிகழ்வுகளை நடத்த அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா இராணுவமும், சிறிலங்கா காவல்துறையும் தெரிவித்துள்ளன.
சிறிலங்காவில் நேற்று அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் மீதான ஆளும்கட்சியினரின் வன்முறைகளும் ஆரம்பமாகியுள்ளன.
சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நிறுத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் அடுத்தடுத்த வாரங்களில் சிறிலங்காவுக்கான பயணங்களை மேற்கொள்ளவுள்ளன.
சிறிலங்காவில் உள்நாட்டு அரசியல் தேவைகளுக்காக நோர்வே மீது தாக்குதல் தொடுக்கப்படுவது கடந்த பத்தாண்டுகளாக இருந்து வரும் வழக்கமே என்று, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.