மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

அத்துருகிரியவில் வீழ்ந்து நொருங்கியது சிறிலங்கா விமானப்படை விமானம்

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரியவில் சற்று முன்னர் சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (புதிய தகவல்கள் இணைப்பு)

போரில் பங்கேற்ற படையினரின் விபரங்களைக் கோரியுள்ளதாம் ஐ.நா – சிறிலங்கா அதிபர் கூறுகிறார்

போரில் பங்கெடுத்த படையினரின் விபரங்களைத் தரக்கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

சிறிலங்காவில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு அனைத்துலக சமூகமே காரணம் – ஐ.நா நிபுணர்

போரின் இறுதிக்கட்டத்தில் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடியை தீர்க்க அனைத்துலக சமூகம் குறிப்பாக, சிறிலங்காவின் அயல் நாடுகள் தவறிவிட்டன என்று குற்றம்சாட்டியுள்ளார் இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு ஆலோசகர் அடமா டையிங்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் ராவய ஆசிரியர்

மகிந்த ராஜபக்சவை விடவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று செய்தி வெளியிட்ட ராவய சிங்கள வாரஇதழின் ஆசிரியர் கே.டபிள்யூ.ஜனரஞ்சன, சிறிலங்கா காவல்துறை குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

19 வேட்பாளர்கள் போட்டியிடும் சிறிலங்கா அதிபர் தேர்தல்

அடுத்தமாதம் 8ம் நாள் நடைபெறும் சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

டோவலின் வெளிவராத கொழும்பு சந்திப்பு இரகசியங்கள் – ஆங்கில வாரஇதழ்

சிறிலங்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளின் முன்னேற்றம் குறித்து, இந்தியா மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தேர்தல் காலத்தில் தமிழர்களின் பாதுகாப்பு விடயத்திலும் புதுடெல்லி கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இளம் இலங்கைக் குடும்பத்தை நௌரு கொண்டு செல்வதற்கு எதிராக அவுஸ்ரேலியாவில் போராட்டம்

மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பேர்த் தடுப்பு முகாமில் இருந்து, இளம் இலங்கைக் குடும்பம் ஒன்றை நௌருவில் உள்ள தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு திரும்பினார் சிசன் – ஐ.நா பதவியை ஏற்கிறார்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய மிச்சேல் ஜே சிசன் நேற்றுடன் தனது பணியை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார்.

தமிழர்களின் சமஸ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன் – மைத்திரிபால வாக்குறுதி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், தமிழ்மக்களின் சமஸ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என்று ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊசலாடும் கிழக்கு, மேல் மாகாணசபைகள் – ஆளும் கூட்டணி அதிர்ச்சி

சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வசம் உள்ள கிழக்கு மற்றும் மேல் மாகாணசபைகளின் ஆட்சி எந்த நேரமும் கவிழும் நிலை உருவானதால், இரு சபைகளும் அடுத்தமாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. (மூன்றாம் இணைப்பு)