கிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மையை இழந்தது மகிந்தவின் கூட்டணி
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளதையடுத்து, கிழக்கு மாகாணசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளதையடுத்து, கிழக்கு மாகாணசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.
இலங்கைத் தீவு உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேரைப் பலிகொண்ட ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
நில அபகரிப்பு, சிங்கள பௌத்த மயமாக்கல், இராணுவ மயமாக்கல், முன்னாள் போராளிகளுக்கெதிரான வன்முறை, சட்டத்திற்கு முரணான கைதுகள், என்று பல்வேறு வழிகளில் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். எனவே பதவியில் இருக்கும் அதிபருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது என்பது ஒரு போதும் ஒரு தெரிவாக இருக்க முடியாது.
போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா நடத்தும் விசாரணைகளுடன் ஒத்துழைக்க வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமை என்று, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பேச்சாளர், ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மைக்காலமாக, சக்தியை அளிக்கும் என்று கூறப்படும், ‘வஜ்ரா’ என்ற தங்க நிறமுள்ள மாந்திரீகப் பொருள் ஒன்றை தனது கைக்குள் வைத்திருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சிறிலங்காவின் அதிபர் தேர்தல் வரலாற்றில், பிரதான வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதிகளை அறிந்து கொள்ளாமலேயே, வாக்களிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு உள்ளாகியுள்ளனர் சுமார் ஐந்தரை இலட்சம் வாக்காளர்கள்.
தாம் ஆட்சிக்கு வந்தால், சீனாவை ஓரம்கட்டி விட்டு, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவோம் என்று கூறிய, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்தப் போவதாக, சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், குத்துக்கரணம் அடித்துள்ளார்.
கடல்வழிப் பட்டுப்பாதை என்ற கோட்பாட்டின் கீழ், சிறிலங்காவின் கடற்படைத் தளத்தை அமைப்பதன் மூலம், இந்தியப் பெருங்கடலில் தன்னை வலுப்படுத்தும் திட்டத்தைச் செயற்படுத்த சீனக் கடற்படை தயாராகியுள்ளதாக, மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் அவுஸ்ரேலிய இந்திய நிறுவகத்தின் ஆராய்ச்சியாளர் டேவிட் பிரூஸ்டர் தெரிவித்துள்ளார்.
சிட்னியில், உணவகம் ஒன்றில் ஆயுததாரியால் 16 மணிநேரமாக பயணம் வைக்கப்பட்டிருந்தவர்கள், காவல்துறையின் அதிரடித் தாக்குதலில் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தையடுத்து அவுஸ்ரேலியாவில் அகதிகள் தொடர்பான கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியங்கள் உருவாகியுள்ளன.
அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள உணவகம் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய மர்மநபரால் பயணக் கைதியாக பொதுமக்கள் பிடித்து வைக்கப்பட்டுள்ளது குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.