ஜனநாயகப் போராளிகள் ‘புலிமுகச்சிலந்தி’ சின்னத்தில் போட்டி
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ரோ, பரப்புரையில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்துள்ளதாக, திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில், மகிந்த ராஜபக்சவினால் முன்மொழியப்பட்ட பலருக்கு இடமளிக்கப்படாத அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமளிப்பதில்லை என்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் நேற்றுமுன்தினம் இரவு திடீர் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வேட்புமனுக்களைப் பாதுகாப்பதற்காக கூட்டம் ஒன்றில் இருந்து ஓடிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள தேர்தலில் 6,151 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப்பட்டியலில் இடமளிக்க மறுத்துள்ளது.
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் உள்ளடக்குவதற்கு, மகிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட அட்மிரல் வசந்த கரன்னகொட உள்ளிட்டோரின் பட்டியலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் அங்கீகரிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில், சரத் பொன்சேகாவை அங்கு களமிறக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.