மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் விடுவிக்கப்படாது – பலாலி பாதுகாப்பு மாநாட்டில் ரணில் திட்டவட்டம்

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு விடுவிப்பதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.

கிரித்தல இராணுவ முகாமில் இருந்த முக்கிய புலனாய்வு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

கிரித்தல இராணுவ முகாமில் உள்ள முக்கியமான இராணுவப் புலனாய்வு ஆவணங்கள் இராணுவக் காவல்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய அரசியலமைப்பில் 13வது திருத்தத்தை அடிப்படையாக கொண்ட அதிகாரப்பகிர்வு – இந்தியா விருப்பம்

13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரப் பகிர்வை அடிப்படையாக கொண்டு, புதிய அரசியலமைப்பு வரையப்படுவதை இந்தியா விரும்புவதாக, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் நாடாளுமன்ற உரைக்கு இந்தியா பாராட்டு – நேரில் தெரிவித்தார் ஜெய்சங்கர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை இந்தியா பாராட்டியுள்ளது. இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசிய போது, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதிவான் எச்சரிக்கையால் ஆடிப்போட சிறிலங்கா இராணுவ தளபதி – கிரித்தல புலனாய்வு முகாமுக்கு ‘சீல்’

ஹோமகம நீதிவானின் எச்சரிக்கையை அடுத்து, கிரித்தல இராணுவப் புலனாய்வுப் பிரிவு முகாமை, ‘சீல்’ வைத்து மூட சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பில் தீவிர பேச்சுக்களில் ஈடுபட்ட ஜெய்சங்கர் – இன்று கூட்டமைப்புடன் சந்திப்பு

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கொழும்பில் சிறிலங்கா அரசாங்கத்துடன் தீவிர பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போதும், இந்தப் பேச்சுக்கள் பற்றிய விபரங்கள் ஏதும் வெளியில் கசிய விடப்படவில்லை.

கடல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஜப்பான் – சிறிலங்கா உயர்மட்டப் பேச்சு

பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, சிறிலங்காவும், ஜப்பானும், இன்று உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளன.

இராணுவக் கட்டளை அமைப்பில் மாற்றம்- டிவிசன் தளபதியாக கீழ் இறக்கப்பட்டார் சவேந்திர சில்வா

சிறிலங்கா இராணுவக் கட்டளை அமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா 53ஆவது டிவிசனின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எங்கிருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதென்று தீர்மானி்க்கவில்லையாம்

பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்கள் எதையும் வாங்குவதற்கு இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

பேரவை விவகாரத்தில் விக்னேஸ்வரனுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் அழுத்தம்

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தங்களை எதிர்கொண்டிருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.