மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

பாகிஸ்தான் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் – சிறிலங்காவுக்கு இந்தியா எச்சரிக்கை

கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் முன்பாக கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் தூதரகத்தின் ஏற்பாட்டில்,  காஷ்மீர் தொடர்பாக இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டமை தொடர்பாக, சிறிலங்காவிடம் இந்தியா அதிகாரபூர்வமற்ற வகையில் கவலை தெரிவித்துள்ளது.

நேற்றுமாலை கொழும்புத் துறைமுகம் வந்தது அமெரிக்கப் போர்க்கப்பல்

அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமாலை சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பில் பாகிஸ்தானியர்களின் ஆர்ப்பாட்டம் – சிறிலங்காவிடம் இந்தியா எதிர்ப்பு

சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தானியர்கள் கடந்த வாரம் கொழும்பிலுள்ள ஐ.நா பணியகம் முன்பாக, இந்திய அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொண்ட போராட்டம் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளது.

வடக்கு மீள்குடியேற்றச் செயலணிக்கு 4 இணைத்தலைவர்கள் – வடமாகாணசபை மீண்டும் புறக்கணிப்பு

சிறிலங்கா அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் உருவாக்கப்பட்ட வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு இணைத்தலைவர்களைக் கொண்டதாக விரிவாக்கியுள்ளார்.

பாதுகாப்பு விவகாரங்களை ஆய்வு செய்ய புதிய நிறுவகத்தை அமைக்கிறது சிறிலங்கா

பாதுகாப்பு விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக சிந்தனைக் குழாம் ஒன்றை உள்ளடக்கிய ஆய்வு அமைப்பு ஒன்றை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உருவாக்கியுள்ளது.

சிறிலங்கா அதிபர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் முக்கிய கூட்டம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

விசாரணைக்குழுவில் மூவரா – நால்வரா? – குழப்பும் தகவல்கள்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களிடையே கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல் தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கெரவலப்பிட்டியவில் திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைக்கிறது இந்தியா

சிறிலங்காவின் மேல் மாகாணத்தில் கெரவலபிட்டிய பகுதியில், 500 மெகாவாட் திறன்கொண்ட, திரவ இயற்கை எரிவாயு மின் நிலையம் ஒன்றை இந்தியா அமைக்கக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்திய- சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு இடையிலான மூலோபாயக் கலந்துரையாடல் நிறைவு

இந்திய- சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு இடையிலான இரண்டாவது மூலோபாயக் கலந்துரையாடல் முடிவுக்கு வந்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

மீண்டும் உள்ளே போகிறார் பசில் – வெளியே வந்தார் நாமல்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று மீண்டும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.