மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்கா கடற்பரப்பில் எரிவாயு ஆய்வு – 6 வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சு

சிறிலங்கா கடற்பரப்பில் இயற்கை எரிவாயு அகழ்வுக்கான சாத்தியங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு, அடுத்தவாரம் அமைச்சரவையின் அனுமதி கோரப்படும் என்று சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி நகரமாக பெயர் மாற்றம் பெறுகிறது துறைமுக நகரத் திட்டம்

சீனாவின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டம், நிதி நகரம் என்ற பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார் சிறிலங்கா அதிபர்

வரும் செப்ரெம்பர் 13ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளரை நீக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் கோரிக்கை

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து பிரிகேடியர் சுரேஸ் சாலியை நீக்கி விட்டு வேறொருவரை அந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளைவான் கடத்தல்கள் பற்றிய ஆவணங்கள் கடற்படைத் தளத்தில் இருந்து திருட்டு

வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அமெரிக்க போர்க்கப்பலில் வரவேற்பு

கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்சில் நேற்று மாலை இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில், சிறிலங்கா அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.

கொழும்புத் துறைமுகத்தில் ரஷ்ய கடற்படைக் கப்பல்

ரஷ்ய கடற்படையின், தேடுதல் மற்றும் மீட்புக் கப்பலான ‘இகோர் பெலோசோவ்’, நான்கு நாள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சி

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும், அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமுன்தினம் மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளைக் கேட்கிறது சீனா

அம்பாந்தோட்டையில், சிறப்புப் பொருளாதார வலயத்தை அமைப்பதற்கு 15 ஆயிரம் ஏக்கர் காணியைத் தருமாறு சீனா கோரியுள்ளதாக சிறிலங்காவின் சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோரின் நிலை என்ன? – விபரம் வெளியிடக் கோருகிறது சர்வதேச செஞ்சிலுவைக் குழு

காணாமற்போயுள்ள 16 ஆயிரம் பேரின் நிலை என்னவென்று அவர்களி்ன் உறவினர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.