போரின் இறுதியில் அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் இடம்பெற்றன – பரணகம ஆணைக்குழு
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான சில குற்றச்சாட்டுகள் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணாக இருப்பதால், நம்பகமான உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால், ஐ.நாவின் நேரடித் தலையீட்டுக்கு வழிவகுக்கக் கூடும் என்று காணாமற்போனோர் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.






