மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சம்பூர் விவகாரம் – கருத்துக்களை வெளியிட இருதரப்புக்கும் தடைவிதித்தார் ரணில்

சம்பூரில் நடந்த சர்ச்கைக்குரிய நிகழ்வு தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவெடுக்கும் வரை, அதுபற்றி எந்தக் கருத்துக்களையும் வெளியிடக் கூடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரண்டு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.

வியட்னாம் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில், நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், வியட்னாம் பிரதமர் குயுன் சான் புக்கிற்கும் இடையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

படைத்தளங்களுக்குள் நுழைய கிழக்கு முதல்வருக்கு தடை – முப்படைகளும் போர்க்கொடி

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், முப்படைகளினதும் தளங்களுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

ஆளுனரின் தவறுகளே பிரச்சினைக்கு காரணம் – கிழக்கு மாகாண முதலமைச்சர் குற்றச்சாட்டு

சம்பூர் மகாவித்தியாலயத்தில் நடந்த சம்பவத்துக்கு ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோவின் தவறுகளே காரணம் என்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் திட்டிய விவகாரம் – கடற்படையின் அறிக்கை சிறிலங்கா அதிபரிடம்

சம்பூரில் நடந்த விழாவில், சிறிலங்கா கடற்படை அதிகாரியை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கடுமையாக திட்டிய விவகாரம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை, பாதுகாப்பு அமைச்சிடம் செய்துள்ள முறைப்பாட்டை, சிறிலங்கா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

வெள்ள நிவாரணப் பணிகளில், கொழும்பு துறைமுக நகரத் திட்டம்

சீனாவின் முதலீட்டில், மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு, வெள்ள நிவாரணத் திட்டம் ஊடாக உதவிப் பொருட்களை விநியோகித்து வருவதாக, கொழும்பு துறைமுக நகரத் திட்டம், தெரிவித்துள்ளது.

அனர்த்தங்களால் சிறிலங்காவுக்கு 2 பில்லியன் டொலர் வரை இழப்பு

சிறிலங்காவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால், சுமார் 1.5 தொடக்கம், 2 பில்லியன் டொலர் வரையான இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருப்பதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து உதவிப்பொருட்களுடன் வருகிறது இரண்டாவது விமானம்

சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரணப் பொருட்களுடன், பாகிஸ்தான் விமானப்படையின் இரண்டாவது விமானம் இன்று கட்டுநாயக்கவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கள மருத்துவமனை, மருத்துவர்களை சிறிலங்காவுக்கு அனுப்புகிறது பாகிஸ்தான்

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு, 30 படுக்கைகளைக் கொண்ட நவீன கள மருத்துவமனையையும், நிவாரணப் பொருட்களையும், பாகிஸ்தான் அனுப்பவுள்ளது.

மீண்டும் முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் வாழ்த்து

தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சராக நாளை பதவியேற்கவுள்ள, ஜெயலலிதாவுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.