மைத்திரி – மகிந்த இந்தவாரம் சந்திப்பு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் இந்தவாரம் நடைபெறவுள்ளன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் இந்தவாரம் நடைபெறவுள்ளன.
தமிழ் மக்களின் இரத்தம் குடித்த லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் கடை வாயிலிருந்து இன்னும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ள நிலையில், சிறிலங்கா அரசியல்வாதிகள் பலரும், அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டிருப்பதானது, தேசிய நல்லிணக்கத்திற்கான சிறிலங்காவின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் போரில் தப்பியவர்களுக்கு ஒரு கவலையான செய்தியை அனுப்பியுள்ளது என்றும், ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது
சிறிலங்கா இராணுவ சிறப்புப் படைப் பிரிவின் அதிகாரி ஒருவர், பரசூட்டில் இருந்து குதித்த போது, நிலத்தில் வீழ்ந்து மரணமானார்.
சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்கினன், நேற்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினார். மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து மிகுந்த கலக்கமடைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில், ஜேவிபியின் சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார போட்டியிடுவார் என, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச, தொடர் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
புதிய கூட்டணியை அறிவிப்பது மற்றும் அதிபர் வேட்பாளரைத் தெரிவு செய்வது ஆகிய விடயங்கள் தொடர்பாக ஆராய, நேற்று நடந்த ஐதேமு பங்காளிக் கட்சிகளின் கூட்டம், முடிவு ஏதும் எடுக்கப்படாமல் முடிவடைந்துள்ளது.