மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

இழுபறியில் ஐதேக கூட்டணி

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் கட்சித் தலைவர்களுக்கிடையில் நேற்று நடந்த பேச்சுக்களில், இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை.

எஸ்பி.திசநாயக்க பதவி நீக்கம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதிரடி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து எஸ்பி.திசநாயக்க நீக்கப்பட்டுள்ளார். நேற்று  நடந்த கட்சியின் சிறப்பு மத்திய குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன இன்று முக்கிய பேச்சு

கூட்டணி அமைத்து தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இன்று முக்கிய பேச்சு நடைபெறவுள்ளது.

தலையிடும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை – பீரிஸ்

இராணுவத் தளபதி நியமனம் உள்ளிட்ட, சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை அமெரிக்காவுக்குக் கிடையாது என, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தலைவரான பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை

பலாலி விமான நிலையத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பமாகும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதாக, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில்

தேசிய ஜனநாயக முன்னணி விரைவில் உருவாக்கப்படும் என்றும், அதன் வேட்பாளரின் பெயர் மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு 19 பேர் போட்டி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றுக்கு, அந்தக் கட்சியின் 19 உறுப்பினர்களுக்கிடையில் போட்டி உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே

சிறிலங்கா இராணுவத்தின் 54 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார் என, இராணுவ செயலகம் நேற்று அறிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தல் – போட்டியில் இருந்து ஒதுங்கினார் தில்ருக்ஷி

சிறிலங்காவில் வரும் நொவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் சொலிசிற்றர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.