மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவு இன்று வெளிவரும்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அறிவிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஒக்ரோபர் 11இல் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்ரோபர் 11ஆம் நாள் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் வெளியிடப்பட்டுள்ளது.

களனி ரஜமகா விகாரையின் தலைமை பதவியில் இருந்து ரணில் நீக்கம்

களனி ரஜமகா விகாரையின் டயக்க சபாவின் தலைவர் பதவியில் இருந்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகிந்த- மைத்திரி- கோத்தா சந்திக்க திட்டம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவும், அடுத்தவாரம் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளனர்.

ஒக்ரோபர் பிற்பகுதியில் தேர்தல் நாள் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் நடைபெறும் நாள் பற்றிய அறிவிப்பு ஒக்ரோபர் மாத பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கோத்தாவின் ஊடகப் பேச்சாளர்களாக டலஸ், ரம்புக்வெல

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு இரண்டு ஊடகப் பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒக்ரோபர் முதல் வாரம் எல்பிட்டிய பிரதேச சபைக்கு தேர்தல்

உச்சநீதிமன்ற உத்தரவுக்கமைய எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை வரும் ஒக்ரோபர் முதல் வாரத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சட்ட செயலர் பொய் சொல்கிறார் – அவரை நீக்க வேண்டும்

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் வரை வேட்பாளரை அறிவிக்க முடியாது என ஐதேகவின் யாப்பில் கூறப்பட்டிருக்கவில்லை என அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

எஸ்.பி , டிலான் பெரேரா மகிந்தவிடம் ஓட்டம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்களாக இருந்த எஸ்.பி.திசநாயக்கவும், டிலான் பெரேராவும் இன்று மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டனர்.

இராணுவ புலனாய்வு பணிப்பாளர் அதிரடியாக நீக்கம்

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சூல கொடிதுவக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.