நாளை சஜித்தின் முதல் பேரணி
தேசிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் நாளை நடைபெறவுள்ளது.
தேசிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் நாளை நடைபெறவுள்ளது.
சிறிலங்காவின் எட்டாவது அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து, வேட்புமனுக்கள் இன்று காலை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கோத்தாபய ராஜபக்ச இன்று முற்பகல் கையெழுத்திட்டார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை, அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையைச் சவாலுக்குபட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அறிவித்த போது, நீதிமன்ற அறையில் இருந்த அவரது சட்டவாளர்கள் கைதட்டியும் பெரும் கூச்சல் எழுப்பியும் நீதிமன்றத்தை அவமதித்துள்ளனர்.
கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமைக்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று மாலை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, பொதுஜன பெரமுனவினர் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அறிவிப்புக்குத் தடைவிதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்காக, இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் செயலகம், பிரதமர் செயலகம், எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் ஆகியவற்றை, அதிபர் வேட்பாளர்களின் பரப்புரைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.