சுதந்திரக் கட்சி -கோத்தா இடையே இன்று புரிந்துணர்வு உடன்பாடு
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் இன்று புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் இன்று புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வழக்கமான பயணிகள் விமான சேவை வரும் நொவம்பர் 1ஆம் நாள் தொடக்கம் இடம்பெறும் என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக, சமன் சிறி ரத்நாயக்கவை நியமிப்பதற்கு, அரசியலமைப்பு சபை அங்கீகாரம் அளித்துள்ளது.
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில், இந்தியாவில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்படவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்த முடிவை, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பிற்பகல் அறிவிக்கவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக, அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ள அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் அதிகாரபூர்வமற்ற கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் வஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரைப் பேரணி நேற்று கொழும்பு காலிமுகத் திடலில் இடம்பெற்றது.
எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர அறிவித்தது அடிப்படையற்றது என்று இதொகா அறிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான இறுதியான முடிவை சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று காலை அறிவிக்கும் என்று கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.