மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முன்னரே தீர்மானம் எடுத்த சிறிலங்கா காவல்துறை

மன்னார், வெள்ளாங்குளத்தில் முன்னாள் போராளியான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தனிப்பட்ட குரோதத்தினால் நிகழ்ந்த கொலை என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

ஐ.நா விசாரணைகள் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்து அதிருப்தி வெளியிட்டார் பீரிஸ்

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

சீனாவுடன் சேர்ந்து இந்தியாவின் கோபத்தைக் கிளறாதீர்கள் – சிறிலங்காவுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

குறுகிய அரசியல் நலன்களுக்காக இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான உறவைப் புறம்தள்ளி விட்டு, சீனாவுடன் உறவைப் பலப்படுத்துவதன் மூலம், சிறிலங்கா ஆபத்தையே விலைகொடுத்த வாங்க நேரிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்காவுக்கு வருகிறார்

கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அடுத்த மாத துவக்கத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஆட்சிக்கு வந்தால் சீனாவைப் புறந்தள்ளுவோம் – ஐதேக எச்சரிக்கை

தாம் ஆட்சிக்கு வந்தால், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்துடன், சீன நிறுவனங்கள் செய்து கொண்டுள்ள உடன்பாடுகள் செல்லுபடியற்றதாகி விடும் என்று ஐதேக எச்சரித்துள்ளது.

சம்பந்தன், ஹக்கீம் இந்தியத்தூதுவருடன் 3 மணிநேரம் மந்திராலோசனை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா இரகசியப் பேச்சு நடத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஆட்சிமுறைக்கு எதிராக கொழும்பில் பாரிய பேரணி – மங்களவும் இணைந்தார்

நிறைவேற்று அதிகார ஆட்சிமுறைக்கு எதிராக சிறிலங்காவின் முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து  கொழும்பில்  இன்று மாலை பாரிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளன.

12 கொமன்வெல்த் நாடுகளில் தகைமையற்ற தூதுவர்கள் – சிறிலங்கா அரசு ஒப்புதல்

கொமன்வெல்த் நாடுகளில் பணியாற்றும் சிறிலங்கா தூதுவர்களில், இரண்டு பேர் மாத்திரமே, அந்தப் பதவிக்குத் தகைமையானவர்கள் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றுத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்குமாறு கோத்தாவுக்கு சபாநாயகர் உத்தரவு

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல் தொடர்பாக விளக்கமளிக்குமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

மூன்றாவது தடவையும் போட்டியிடலாம் – மகிந்தவுக்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையும்  அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.