ரவிராஜ் கொலையாளிகளான சிறிலங்கா கடற்படையினர் மூவர் கைது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட, சிறிலங்கா கடற்படையினர் மூவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட, சிறிலங்கா கடற்படையினர் மூவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும், கைது செய்யுமாறு, கடுவெல நீதிமன்றம் சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் மாத முற்பகுதியில் பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஸ்யக் கடற்படையின் பசுபிக் கப்பல் படைப்பிரிவைச் சேர்ந்த மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. அட்மிரல் பன்ரெலீவ், பெசெங்கா, எஸ்.பி-522 ஆகிய கப்பல்களே, கடந்த 28ம் நாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இணையான, மார்ஷல் ஒவ் த எயார் பதவி, தனக்குக் கிடைப்பதை தடுப்பதற்கு சதி இடம்பெறுவதாக தாம் சந்தேகிப்பதாக சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ரொஷான் குணதிலக தெரிவித்துள்ளார்.
திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில், இருந்து இடம்பெயர்ந்த 579 குடும்பங்கள், ஏப்ரல் மாத இறுதிக்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியர்த்தப்படுவர் என்று கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இந்திய – சிறிலங்கா மீனவர்களுக்கு இடையில் மீன்பிடித்தல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, இந்திய மீனவர்களால் முன்வைக்கப்பட்ட திட்டம் தொடர்பாக, வடக்கிலுள்ள மீனவர் சங்கங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண மீன்பிடி அமைச்சர் ஆகியோருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு நடத்தவுள்ளார்.
பொலன்னறுவவில் நேற்றுமுன்தினம் இரவு கோடரியால் வெட்டப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், உயிருக்குப் போராடி வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், பிரியந்த சிறிசேன( 43 வயது) இன்று அதிகாலை உயிரிழந்தார்.
சிறிலங்காவில் அதிபர் தேர்தலுக்குப் பின்னர், மேற்குலக சக்திகள் மற்றும், இந்தியாவுடனான உறவுகளில் திடீர் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக சீனாவை சிறிலங்கா இழக்காது என்றும் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.