மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மகிந்தவுக்கு கைகொடுக்கிறது பொது பல சேனா

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனா அறிவித்துள்ளது.

பிரபாகரனை மீட்க முயன்றது அமெரிக்கா – சிறிலங்கா குற்றச்சாட்டு

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மீட்பதற்கு அமெரிக்கா முயற்சி செய்ததாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

மாவீரர் நாளை அனுஸ்டிக்க விடமாட்டோம் – பிரிகேடியர் ருவான் வணிகசூரிய

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கோ, மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்கோ, சிறிலங்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கோரிக்கை

சிறிலங்கா மீதான விசாரணைகளுக்கு ஆக்கபூர்வமான முறையில் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிரணிக்குத் தாவினார் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் – சிறிகோத்தாவில் மைத்திரிபால

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். (இரண்டாம் இணைப்பு)

புத்தர் பிறந்த லும்பினியில் சிறிலங்கா அதிபர் வழிபாடு

சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளம் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நேற்று கௌதம புத்தர் அவதரித்த லும்பினிக்குச் சென்று வழிபாடுகளை நடத்தியுள்ளார்.

20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியுடன் இணைய காத்திருக்கின்றனராம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 15 தொடக்கம் 20 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி, எதிரணியுடன் இணையவுள்ளதாக, நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை தெரிவித்துள்ளார்.

ஐ.நா கண்காணிப்பாளர்களை அழைக்கமாட்டேன் – சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர்

அதிபர் தேர்தலைக் கண்காணிக்க ஐ.நா கண்காணிப்புக் குழுவை அழைக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

புதிய ஆட்சியில் எஞ்சியிருக்கும் புலிகளையும் அழிப்போம் – சூளுரைக்கிறது ஐதேக

சிறிலங்காவில் எதிரணி அமைக்கவுள்ள புதிய ஆட்சியில், அனைத்துலக அளவில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள் என்றும், புலிகளின் கனவு நிறைவேற ஒருபோதும் விடமாட்டோம் என்றும் நாடாளுமன்றத்தில் சூளுரைத்துள்ளார் ஐதேகவின்  பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

கொழும்புத் துறைமுகத்தில் ரஸ்ய நாசகாரிப் போர்க்கப்பல்

ரஸ்யக் கடற்படையின் ‘யரொஸ்லாவ் முட்ரி’ என்ற நாசகாரி போர்க்கப்பல் நான்கு நாள் நல்லெண்ணப் பயணமாக நேற்று, கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.