மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மகிந்தவுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

வரும் ஜனவரி 8ம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

கோத்தாவும் பரப்புரையில் இறங்கினார் – தேர்தல் விதிமுறையை மீண்டும் மீறுகிறார்

வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்குமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார்.

புலிகளைத் தோற்கடித்த சிறிலங்காவுக்கு அஜித் டோவல் பாராட்டு

விடுதலைப் புலிகளை சிறிலங்கா அரசாங்கம் வெற்றிகரமாகத் தோற்கடித்ததற்கு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் பாராட்டுத் தெரிவித்துள்ளார். (இரண்டாம் இணைப்பு)

எதிரணியின் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்தானது

அடுத்தமாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இன்றுகாலை புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து கவலையில்லை – என்கிறார் மகிந்த

தன் மீது சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து தான் கவலை கொள்ளவில்லை என்று மாத்தறையில் நேற்றுமாலை நடந்த கூட்டம் ஒன்றில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரசை வளைத்துப் போட்டார் மகிந்த? – அலரி மாளிகையில் சந்திப்பு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையில் முக்கிய  சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

நவீன் திசநாயக்கவும் எதிரணியுடன் இணைகிறார் – அமைச்சர் பதவியை துறந்தார்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, பொதுமுகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திசநாயக்க தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

மைத்திரிபாலவின் கருத்தினால் சம்பிக்க அதிருப்தி

தாம் ஆட்சிக்கு வந்தால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போவதாக, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது குறித்து, ஜாதிக ஹெல உறுமய அதிருப்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவை எதிர்க்கமாட்டேன் – பின்வாங்கினார் சரத் என் சில்வா

மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் இடமாற்றம் வழக்கமானதாம்

யாழ்ப்பாணத்தில் இருந்து மேஜர் ஜெனரல் உதய பெரேரா, இடமாற்றம் செய்யப்பட்டது வழக்கமானதொரு நடவடிக்கை தான் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.