மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கொழும்பில் ராஜபக்ச குடும்பம் மறைத்து வைத்திருந்த சிறிய விமானம் மீட்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கருதப்படும், சிறிய ரக விமானம் ஒன்று கொழும்பில் இன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஊவா மாகாணசபை ஐதேக வசம் – ராஜபக்ச குடும்ப ஆதிக்கம் முற்றாக ஒழிகிறது

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பெறாமகனின் கையில் இருந்த ஊவா மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தையும் ஐதேக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது.

கொழும்பு வந்தார் பாப்பரசர் – புறக்கணித்தார் மகிந்த

கத்தோலிக்கத் திருச்சபையின் முதல்வரான பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் மூன்று நாள் பயணமாக சற்று முன்னர் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.

அரசதரப்புடனான சந்திப்பில் கூட்டமைப்புக்கு சாதகமான சமிக்ஞைகள்

தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை  நடத்தியுள்ளது.

சிறிலங்காவுடன் பலமான உறவை எதிர்பார்க்கிறது பிரித்தானியா

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன், பலமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு பிரித்தானியா எதிர்பார்த்திருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.

27 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு தற்போது சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இடம்பெற்று வருகிறது. புதிய அமைச்சர்கள் 27 பேர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக, பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர்.

பிரதம நீதியரசர் மொகான் பீரிசுக்கு 48 மணிநேர காலக்கெடு

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், சட்டவிரோதமான முறையில் பதவியில் அமர்த்தப்பட்ட சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிசை பதவி விலகக் கோரி இன்று உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு ஆலோசகர் பதவி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மூத்த ஆலோசகராக, முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின்  தலைவருமான சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார்.

அதிபரின் பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார் மைத்திரி

சிறிலங்காவின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரான மைத்திரிபால சிறிசேன, இன்று தனது கடமைகளை முறைப்படி ஏற்றுக் கொண்டார்.

அமெரிக்கா சொன்னபடி செய்து விட்டேன் – என்கிறார் மகிந்த

அமைதியான முறையில் தேர்தலை நடத்தும்படி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் தன்னிடம் கூறியதாகவும், அதன்படியே செய்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.