மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

விடைபெற்றார் சிராணி – புதிய பிரதம நீதியரசர் சிறீபவன்

சிறிலங்காவின் 43வது பிரதம நீதியரசரான சிராணி பண்டாரநாயக்க இன்று, உயர்நீதிமன்றத்தில் சக நீதியரசர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பணியாளர்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டார்.

அணித் தலைவர் பதவிகளில் இருந்து தூக்கப்படும் மகிந்தவின் புதல்வர்கள்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர், சிறிலங்கா கடற்படை மற்றும் இராணுவ ரக்பி அணிகளின் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.

ஒரு நாள் மட்டும் பிரதம நீதியரசராக இருப்பார் சிராணி பண்டாரநாயக்க

சிறிலங்காவின் பிரதம நீதியரசராக மீண்டும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சிராணி பண்டாரநாயக்க நாளை தனது பதவி விலகல் கடிதத்தை, சிறிலங்கா அதிபரிடம் ஒப்படைப்பார் என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் வந்தார் சிராணி பண்டாரநாயக்க – குழப்பத்தில் சிறிலங்கா நீதித்துறை

சிறிலங்காவின் பிரதம நீதியரசராக மீண்டும் பொறுப்பேற்பதற்காக – முன்னைய அரசாங்கத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 43வது பிரதம நீதியரசர்  சிராணி பண்டாரநாயக்க உயர்நீதிமன்ற வளாகத்துக்கு தற்போது வருகை தந்துள்ளார்.

அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்

தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்கா உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மகிந்தவைத் தோற்கடிக்கும் திட்டத்தில் நிமால் சிறிபாலவும் பங்கெடுத்தார் – ராஜித சேனாரத்ன

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்கும், திட்டத்தில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வாவும் அங்கம் வகித்திருந்ததாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் யாழ்ப்பாணம் செல்கிறார்

சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

யோசித ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் நிராகரிப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான, லெப். யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையில் இருந்து விலகுவதாக அளித்த பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா கடற்படைத் தளபதி நிராகரித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் மகிந்த

சிறிலங்காவில் நடந்த அதிபர் தேர்தலில் தாம் தோல்வியடைந்த பின்னர், தமக்கு எதிராகவும், தமது குடும்பத்தினருக்கு எதிராகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

வடக்கில் தாக்குதல் நடத்தி ஆட்சியைப் பிடிக்கும் கோத்தாவின் புதிய சதித் திட்டம்

சிறிலங்கா இராணுவத்தின் ஒரு குழுவினரைப் பயன்படுத்தி அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாட்டில் குழப்பநிலையை ஏற்படுத்த சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சதித்திட்டம் தீட்டியுள்ளது குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.