மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகளை மீளாய்வு செய்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக, சிறிலங்காவின் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, இந்த வாரம் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வடக்கின் புதிய ஆளுனருக்கு ‘ஓதி அனுப்பிய’ இராணுவ அதிகாரிகள்

வடக்கு மாகாண ஆளுனர் பதவியைப் பொறுப்பேற்பதற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்காரவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முதலாவது சந்திப்பு நாளை இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தில் இருந்து இருந்து விலகுவோம் – ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

முன்னைய ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், ஊழல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவோம் என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

சிறிலங்காவில் ஆட்சி மாறினாலும் பிரித்தானிய நிலைப்பாடு மாறாது – ஹியூகோ ஸ்வையர்

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், சிறிலங்கா தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இரு பிரதேச சபைகளுக்கு பெப்ரவரி 28ம் நாள் தேர்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளுக்கு அடுத்த மாதம் 28ம் நாள் தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

பதவியேற்றார் சிறீபவன் – பிரதம நீதியரசரான மூன்றாவது தமிழர்

சிறிலங்கா உயர்நீதிமன்றத்தின் 44வது பிரதம நீதியரசராக கனகசபாபதி சிறீபவன் இன்று மாலை , சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார்.

அதிகாலையில் அலரி மாளிகையில் இருந்தார் மொகான் பீரிஸ் – நேரில் கண்டதை ரணில் விபரிப்பு

அதிபர் தேர்தலுக்கு மறுநாள் அதிகாலையில் தான் அலரி மாளிகைக்குச் சென்ற போது, அங்கு பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் நின்றிருந்ததாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வடக்கில் படை முகாம்கள் மீது கற்களை வீசத் தூண்டிய இராணுவ அதிகாரிகள் மீது விசாரணை

வடக்கில் சில இராணுவ முகாம்களின் மீது கற்களை வீசுமாறு ஒரு குழுவினரைத் தூண்டி விட்ட, இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மைத்திரியிடம் பேரம் பேசிய மொகான் பீரிஸ் – சாதகமாக தீர்ப்புகளை அளிப்பாராம்

தன்னைத் தொடர்ந்தும் பிரதம நீதியரசராகச் செயற்பட அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், 44வது பிரதம நீதியரசராக இருந்த மொகான் பீரிஸ் கெஞ்சியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விலைகள் குறைப்பு, ஊதிய அதிகரிப்பு – அள்ளிவீசப்பட்டுள்ள பொருளாதார சலுகைகள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின்  2015ம் ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில், பெருமளவு பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.