சிறிலங்கா- சீன கொமாண்டோக்களின் கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவு
சிறிலங்கா- சீன கொமாண்டோக்கள் இணைந்து நடத்தி வந்த பட்டுப்பாதை-2015 கூட்டுப் பயிற்சியின் இரண்டாவது கட்டம் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
சிறிலங்கா- சீன கொமாண்டோக்கள் இணைந்து நடத்தி வந்த பட்டுப்பாதை-2015 கூட்டுப் பயிற்சியின் இரண்டாவது கட்டம் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை சிறுபான்மையின வேட்பாளர்களுக்கு உரிய இடமளிக்காமல் ஓரம்கட்டியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர், சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவாரா என்பது தொடர்பில் குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கும் புரிந்துணர்வு உடன்பாடு, இன்று காலை அலரி மாளிகையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கத் தயாராக இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பூர் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த பொதுமக்களின் 818 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கேகே வழங்குமாறு சிறிலங்கா உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளதுடன், சிறிலங்கா முதலீட்டு சபையிடம் இந்த காணிகளை கையேற்றிருந்த கேட்வே இன்டர்ஸ்றீஸ் நிறுவனத்தின் வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒரே ஒரு ஆசனம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி, மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளது.
சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக இன்று பதவியேற்கவுள்ளார் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன. சிறிலங்கா கடற்படைத் தலைமை அதிகாரியாக இருந்த ரவீந்திர விஜேகுணவர்த்தனவை புதிய கடற்படைத் தளபதியாக நியமிப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்திருந்தார்.