மேலும்

இராணுவ அதிகாரிகளைக் காப்பாற்றத் தவறியுள்ளது சிறிலங்கா அரசு – உதய கம்மன்பில குற்றச்சாட்டு

udaya gammanpilaமேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட முக்கிய இராணுவ அதிகாரிகளை போர்க்குற்றச் சாட்டுகளில் இருந்து காப்பாற்ற அரசாங்கம் தவறியுள்ளதாக, குற்றம்சாட்டியுள்ளார், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய  கம்மன்பில.

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரை முன்னெடுத்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் இப்போது கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

போரை முடிக்கு கொண்டு வந்தவர்கள் மீதே போர்க்குற்ற விசாரணைகளை நடத்த தீர்மானித்துள்ளனர்.

குறிப்பாக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட முக்கிய இராணுவ கட்டளை அதிகாரிகள் மீதான போர்க்குற்றச் சாட்டுகள் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கம் அக்கறையின்றிச் செயற்பட்டு வருகிறது.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

எமது ஆட்சியில் சிறிலங்கா இராணுவத்தினரை எவ்வாறு பாதுகாத்தோம் என்பது நன்றாகவே தெரியும். ஆனால் இன்று அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் சிறிலங்கா இராணுவத்தை போர்க்குற்றவாளிகள் என நிரூபித்து மறுபுறம் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்கின்றது.

அனைத்துலக சமூகத்தின் வேண்டுகோள் மற்றும் ஐ.நாவின் கோரிக்கைக்கு அமைய தமிழர் தரப்பை திருப்திப்படுத்தும் வகையில் சிறிலங்கா இராணுவத்தினரை தண்டிக்க முயற்சிக்கிறது” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *