மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மகிந்தவின் தேர்தல் பணியகத்தில் நுழைந்த அரச புலனாய்வு அதிகாரி கைது

குருநாகலவில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பிரதான தேர்தல் பணியகத்தில் ஆயுதம் தாங்கிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

13க்கு அப்பால் தமிழர்களுக்கு எதையும் கொடுக்கமாட்டோம் – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் எதையும் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த.

தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் நிதியுதவி பெறவில்லை – என்கிறார் மகிந்த

தேர்தல் பரப்புரைகளுக்காக சீனாவிடம் இருந்து எந்த நிதியுதவியையும் தாம் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

கொழும்பில், இன்று நண்பகல் ஐதேகவின் தேர்தல் பரப்புரையார்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் ஐதேக ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி, 12 பேர் காயம்

கொழும்பில் கொட்டாஞ்சேனைப் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஐதேக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்தனர்.

ஐ.நா – சிறிலங்கா இடையே இரகசிய இணக்கப்பாடு இல்லை என்கிறார் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்

சனல் 4 ஊடகம் குறிப்பிட்டது போல, சிறிலங்கா அரசாங்கத்துக்கும் ஐ.நாவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏதும் இருக்கும் என்று தாம் நம்பவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடி விவகாரத்தில் ராஜபக்சவினரைக் காப்பாற்ற முடியாது – ராஜித சேனாரத்ன

போர்க்குற்றங்களுக்காக ராஜபக்சவினரை அனைத்துலக விசாரணைக்கு கொண்டு செல்ல இடமளிக்க முடியாது என்றாலும், வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்திருந்தால் அவர்களைக் காப்பாற்றப் போவதில்லை என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான சிறிலங்காவின் தூதுவராகப் பதவியேற்கிறார் எசல வீரக்கோன்

இந்தியாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக எசல வீரக்கோன் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

சமஸ்டி கேட்கும் சம்பந்தன் குப்பைத் தொட்டிக்குள் போவாராம் – ஜாதிக ஹெல உறுமய கூறுகிறது

சமஸ்டி ஊடாக நாட்டை துண்டாட முயன்றால், சம்பந்தன் போன்றவர்கள் வரலாற்றில் குப்பைத் தொட்டிக்குள் போக நேரிடும் என்று எச்சரித்துள்ளார், ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க.

கூட்டமைப்பின் சமஸ்டி யோசனையை ஐதேக நிராகரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள, சமஸ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரும் அரசியல் தீர்வை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது.