மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது பரப்புரைப் போர்

எதிர்வரும் 17ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளன. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள், கடுமையான பரப்புரைகளில் ஈடுபட்டு வந்தன.

வெற்றி பெற்றாலும் பிரதமர் பதவி கிடையாது – மகிந்தவுக்கு மைத்திரி கடிதம்

வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 113 ஆசனங்களை வென்றாலும் கூட, பிரதமராகி விட முடியாது என்று, மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தல்: கேணல் சிறிவர்த்தனவை கைது செய்வதை பிற்போடுமாறு உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கடத்தப்பட்டு காணாமற்போனது தொடர்பாக, சிறிலங்கா இராணுவ அதிகாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளைப் பிற்போடுமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

தேர்தலுக்குத் தயார் நிலையில் சிறிலங்கா இராணுவம்

சிறிலங்காவில் வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பாதுகாப்பு வழங்கத் தயார் நிலையில் இருக்குமாறு சிறிலங்கா இராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

யோசித ராஜபக்சவின் நண்பியிடம் தீவிர விசாரணை

சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, அவரது நண்பியான யசாரா அபேநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

தாஜுதீன் கொலை: சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கப் பணிப்பாளரிடம் 6 மணிநேரம் விசாரணை

சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெகத் அபேநாயக்கவிடம், ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் திறன் விருத்தி நிலையத்தை அமைக்கிறது இந்தியா

யாழ்.பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் திறன் விருத்தி நிலையம் ஒன்றை அமைக்கும் 300 மில்லியன் ரூபா திட்டம் ஒன்றை இந்தியா ஆரம்பித்துள்ளது.

ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெறுகிறார் மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெற விரும்புவதாக கத்தோலிக்கத் திருச்சபைக்கு அறிவித்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி முகாம் ஒன்றில் சிறைவைப்பு?

தனது கணவர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவத்துடன் தொடர்புடைய, இராணுவ அதிகாரிகளை குற்றப்புலனாய்வுப் பிரிவவிடம் ஒப்படைக்குமாறு, அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட, சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் கோரியுள்ளார்.

தோண்டியெடுக்கப்பட்டது தாஜுதீன் சடலம் – வெளிவருமா மகிந்தவின் கோரமுகம்?

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ரக்பி வீர்ர் வசீம் தாஜுதீனின் புதைகுழி இன்று தோண்டப்பட்டு, அவரது சடலத்தின் எஞ்சிய பாகங்கள் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.