மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

வன்முறைகள் நடந்தால் வாக்களிப்பு நிறுத்தப்படும் – தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை

சிறிலங்காவில் இன்று நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், வீண் சிரமங்களை தவிர்க்கும் வகையில் நேரகாலத்துடன் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களித்து, வாக்காளர்கள் தமது ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய.

சிறிலங்காவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் – சற்று நேரத்தில் வாக்களிப்பு ஆரம்பம்

சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவடையும்.

சிறிலங்கா அதிபரின் ஆலோசகராக முன்னாள் கடற்படைத் தளபதி நியமனம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகள் நாளை நள்ளிரவு முதல் வெளியாகும்

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நாளை நடக்கவுள்ள தேர்தலின் தொகுதி மட்டத்திலான முடிவுகள், நாளை நள்ளிரவுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேசியப்பட்டியல் விவகாரம் – நீதிமன்ற உத்தரவை நாடுவார் தேர்தல்கள் ஆணையாளர்?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து அனுர பிரியதர்சன யாப்பாவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜெயந்தவும், நீக்கப்பட்டதன் சட்டபூர்வதன்மை குறித்து கருத்து வெளியிட மறுத்துள்ளார் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர்.

கொலையும் செய்வோம் – மைத்திரியை மிரட்டும் மகிந்தவின் விசுவாசி

பதவியில் இருந்து நீக்கப்பட்ட அனுர பிரியதர்சன யாப்பாவையும், சுசில் பிரேமஜெயந்தவையும், மீண்டும் அதே பதவிகளில் அமர்த்தாவிடின் தாம் கொலை செய்யவும் அஞ்சப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை மிரட்டியுள்ளார் மகிந்தவின் விசுவாசியான முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்.

அனுர யாப்பா, சுசில் பிரேமஜெயந்தவை சுதந்திரக் கட்சியை விட்டே நீக்கினார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பாவும், சுசில் பிரேமஜெயந்தவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மக்களின் ஆணைக்கு மதிப்பளியுங்கள் – மைத்திரிக்கு மகிந்த பதில் கடிதம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளிக்கும் ஆணைக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மகிந்தவை பிரதமராக்க இணங்கும் அவசர உடன்பாடு – மைத்திரிக்கு பதிலடி

வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், மகிந்த ராஜபக்சவைப் பிரதமரான நியமிப்பதற்கு ஆதரவு வழங்குவதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களுக்கிடையில் உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

புலிகளுக்கு பணம் கொடுத்து வெற்றிபெற்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறார் சுசில்

விடுதலைப் புலிகளுக்குப் பயணம் கொடுத்தே அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார் என்று, ஐதேக தரப்பு கூறிய குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த ஒப்புக் கொண்டிருக்கிறார்.