மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஜப்பான் செல்கிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வரும் ஜூன் 9ஆம் நாள் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவருடன் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலரும் ஜப்பான் செல்லவுள்ளனர்.

கிழக்கு முதல்வர் மீது விசாரணை நடத்தக் கோருகிறார் மகிந்த

சிறிலங்கா கடற்படை அதிகாரியான கப்டன் பிரேமரத்னவை மோசமாகத் திட்டிய, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் முகமட்டை விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

1.1 கிலோ தங்கத்துடன் சிக்கினார் மகிந்தவின் இணைப்புச் செயலாளர்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் முன்னாள் இணைப்புச் செயலாளரான சம்பிக்க கருணாரத்ன, 1.1 கிலோ தங்கத்துடன், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பாக சிறப்புப் பணியகம் – சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம்

போர்க்காலத்தில், காணாமற்போனோர் தொடர்பான, விபரங்களை அறிந்து கொள்ளவும், தகவல்களை உறவினர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும், சிறப்புப் பணியகம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அனுர சேனநாயக்கவுக்கு மே 26 வரை விளக்கமறியல்

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்கவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதிகாவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க கைது

சிறிலங்கா காவல்துறையின், முன்னாள் மூத்த காவல்துறை மா அதிபர், அனுர சேனநாயக்க இன்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் வெற்றி சிறிலங்காவுக்கு ஆபத்து – கலாநிதி வசந்த பண்டார

தமிழ்நாட்டில், முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது, சிறிலங்காவுக்கு ஆபத்தானது என்று, தேசப்பற்று தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. 

நாளை மறுநாள் ஜப்பானுக்குப் புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்

ஜப்பானில் நடக்கவுள்ள ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள், ரோக்கியோவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

மேலும் 5 சடலங்கள் இன்று மீட்பு – பலியானோர் தொகை 87 ஆக உயர்வு

கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்கவில், கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்துபோன 5 பேரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்துக்கு 220 கோடி ரூபா உதவி வழங்குகிறது ஜப்பான்

யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்துக்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வளாகம் ஒன்றை அமைப்பதற்கு, 2.2 பில்லியன் ரூபாவை உதவியாக வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.