அம்பாந்தோட்டை பொருளாதார முதலீட்டு வலய திட்டம் – சீனாவுடன் பேச்சுக்கள் ஆரம்பம்
அம்பாந்தோட்டையில் 10 பில்லியன் டொலர் பொருளாதார முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக சீன முதலீட்டாளர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.
அம்பாந்தோட்டையில் 10 பில்லியன் டொலர் பொருளாதார முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக சீன முதலீட்டாளர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.
ஜப்பானியக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் இன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளன. இனாசுமா, சுசுற்சுகி ஆகிய பெயர்களைக் கொண்ட ஜப்பானியப் போர்க்கப்பல்களே கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துக் கப்பலான யுஎஸ்எஸ் நியூ ஒர்லியன்ஸ் நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் கடந்தவாரம் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக, அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று சிறிலங்காவின் உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரை, அவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப் போவதில்லை என்று, சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும், குறைவாகவே வரி வருமானம் கிடைத்திருப்பதாக, சிறிலங்காவின் நிதி அமைச்சர் சார்பில் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், 7 சந்தேகநபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதித் தடை அண்மையில் நீக்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகளின் மீன் தேவைக்கு ஏற்றளவுக்கு, மீன்களை விநியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது.
chinசிறிலங்காவில் எதிர்கால முதலீடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.