மேலும்

நேற்றிரவு பலத்த பாதுகாப்புடன் கட்டுநாயக்க வந்தடைந்தார் ரஷ்ய சட்டமா அதிபர்

ரஷ்யாவின் சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சன், 21 பேர் கொண்ட குழுவினருடன்,  நேற்றிரவு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தத் தூதுக்குழுவினர் மொஸ்கோவிலிருந்து ‘RSD-306’ என்ற சிறப்பு ரஷ்ய விமானம் மூலம், நேற்றிரவு 8:47 மணிக்கு  கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ரஷ்யக்குழுவினர் வருகையின் போது, ​​கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *