மேலும்

ஜிஎஸ்பி பிளஸ் சலுகைக்கு ஆபத்தை விளைவிக்கும் – சஜித் எச்சரிக்கை

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழித்து, புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதாக ‘தேசிய மக்கள் சக்தி’  அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

சிறப்பு  அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“புதிய அரசியலமைப்பு விரைவில் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். எனவே, அரசியலமைப்பை மாற்ற வேண்டிய நேரம் இது.

அரசியலமைப்பில் மனித உரிமைகள் தொடர்பான தனி அத்தியாயம் ஒன்றைச் சேர்க்க வேண்டும்.

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’  மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலம்’  உள்ளிட்ட முன்மொழியப்பட்ட சட்டங்கள், சிறிலங்காவுக்கு கிடைத்துவரும் ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *