மேலும்

ரில்வின் சில்வாவை சந்தித்தார் இந்தியத் தூதுவர்

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்து, இந்தியா மற்றும் சிறிலங்கா இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இந்தியா- சிறிலங்கா உறவுகள் மற்றும் தற்போதைய நிகழ்வுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக, இந்திய தூதுவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் சிறிலங்கா இடையிலான இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் பலப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்று வரும் இராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *