நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை ஏப்ரல் 29 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம் காணிப் பிரச்சினையில், பெண் ஒருவரைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று காலை வாக்குமூலம் பெறுவதற்காக, இளவாலை காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தார்.
அவரிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர், கைது செய்த காவல்துறையினர், அவரது பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை பொறுப்பேற்ற பின்னர், மல்லாகம் நீதிமன்றில் நிறுத்தினர்.
இதையடுத்து. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை ஏப்ரல் 29 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம் இராமநாதன் அர்ச்சுனாவால் மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் பெண்களில், ஒருவர் நேற்று கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டு 29 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மற்றொருவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
