2025இல் 1,062.8 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடு
2025 ஆம் ஆண்டில் சிறிலங்கா 1,062.8 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளதாக சிறிலங்கா முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. இதில் சிங்கப்பூரும் இந்தியாவும் முன்னணியில் உள்ளன.
கடந்த ஆண்டு வெளிநாட்டு முதலீடுகளில் உற்பத்தித் துறை 486 மில்லியன் அமெரிக்க டொலர் பங்களிப்புடன் முதலிடத்தில் இருந்தது.
உள்கட்டமைப்பு துறையில், 404.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது.
துறைமுக கொள்கலன் முனையங்களில் 275.3 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடிய முதலீடுகள் இடம்பெற்றுள்ளன.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் விருந்தோம்பல் துறை தலைமையிலான சேவைகள் துறை, மொத்த அந்நிய முதலீட்டில் 168.1 மில்லியன் டொலர் பங்களித்தது.
சிங்கப்பூர் 318.86 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்து முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து இந்தியா 213.67 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் இரண்டாமிடத்திலும், பிரான்ஸ் 122.49 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.
