மேலும்

டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிப்பு

சிறிலங்கா இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துப்பாக்கி பாதாள உலக குழுவினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது தொடர்பாக,  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அவரை இன்று மன்றில் நிறுத்திய போது, கம்பஹா நீதிவான் சீலானி பெரேரா,  தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில், செல்வதற்கு அனுமதியளித்தார்.

2001 ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தாவுக்கு அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக சிறிலங்கா இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளி மாகந்துரே மதுஷிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகளை அடுத்தே, டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *