திருகோணமலைக்கு அப்பால் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை இல்லை
திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கிலோ மீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 4.06 மணியளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது என்றும், இது றிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வை அடுத்து சுனாமி எச்சரிக்கைகள் ஏதும் வெளியிடப்படவில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
