முன்னாள் அமைச்சர் கெஹெலியவுக்கு கட்டுக்கட்டாக குற்றப்பத்திரம்
தரமற்ற தடுப்பூசி மருந்து இறக்குமதி செய்யப்பட்ட மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ஏனைய 11 பேருக்கும் எதிராக, கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தில், நேற்று குற்றப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் கட்டுக்கட்டாக குற்றப்பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
அதேவேளை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, கெஹெலிய ரம்புக்வெல்லவை, பிணையில் செல்ல அனுமதித்த ட்ரயல் அட் பார் நீதிபதிகள், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.