சிறிலங்கா காவல்துறையுடன் நெருக்கமாகும் அமெரிக்கா
சிறிலங்கா காவல்துறையுடன் அமெரிக்கா பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பது குறித்து, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கலந்துரையாடியுள்ளார்.
கடந்த வாரம் சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபர் பிரியந்த விஜேசூரியவை, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அமெரிக்கா-சிறிலங்கா இடையேயான வலுவான கூட்டாண்மை குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக, அமெரிக்க தூதுவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன்போது, இலங்கையர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சைபர் குற்றங்கள், போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பது குறித்து கலந்துரையாடினோம் என்றும் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.