எல்லை நிர்ணயத்திற்கு பின் மாகாண தேர்தல் – ஐ.நாவுக்கு சிறிலங்கா பதில்
எல்லை நிர்ணய செயல்முறை முடிந்ததும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியத்துக்கு உறுதியளித்துள்ளது.
சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமை குறித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு, அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலிலிலேயே சிறிலங்கா அரசாங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்கள் 2014 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில்,
“2022 இல் திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சித் தேர்தல்களை 2025 மே மாதம் நடத்த அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்தது.
எல்லை நிர்ணய செயல்முறை முடிந்ததும் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது,” என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.