மேலும்

ரணில் நிலை குறித்து மைத்ரியிடம் விசாரித்த அமெரிக்க தூதுவர்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க தூதுவர் ஜூலி சங், அவரது நிலை குறித்து விசாரித்துள்ளார்.

அவர், மைத்ரி விக்ரமசிங்கவிடம்,  ரணில் விக்ரமசிங்கவின் நலன்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமெரோன், மற்றும் மாலைதீவின் முன்னாள் அதிபர் மொகமட் நஷீட் ஆகியோரும் மைத்ரி விக்ரமசிங்கவுடன் தொடர்பு கொண்டு ரணில் விக்ரமசிங்கவின் நிலை குறித்து விசாரித்துள்ளனர்.

அதேவேளை இந்தியாவுடன் மிக நெருக்கமாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் கைது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என, மூத்த இந்திய ஊடகவியலாளர் வெங்கட் நாராயண் தெரிவித்துள்ளார்.

இந்தியா இந்த விடயத்தில் தலையிடாது என்றும் ஆனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு உயர் சிகிச்சை அளிக்க முன்வரக் கூடும் என்றும், சென்னையிலோ அல்லது டெல்லியிலோ உள்ள அப்பலோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க வசதிகளை செய்து கொடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை,  எதிர்க்கட்சி அரசியல் சக்திகளை அடக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக, கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு, எதிர்க்கட்சி குழு  நாளை விளக்கமளிக்கவுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் செயலகத்தில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்திற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *