ரணிலை விசாரணைக்கு அழைத்தது குற்றப் புலனாய்வுப் பிரிவு
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை, வரும் வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு, அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் இருந்து திரும்பும் போது, பல்கலைக்கழக நிகழ்வுக்காக விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளுக்காகவே, அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போதைய அதிபரின் செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடம் அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தியிருந்தனர்.
