உலகின் மிகச்சிறந்த தீவுகளின் பட்டியல் – முதலிடத்தில் சிறிலங்கா
உலகின் 50 மிகச் சிறந்த தீவுகளின் பட்டியலில் சிறிலங்கா இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.
பூகோள சுற்றுலா தளமான பிக் 7 ட்ராவல் (Big 7 Travel) 2025ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பன்முகத்தன்மை மற்றும் வளமான இயற்கை அழகுக்காக கொண்டாடப்படும் இந்த தீவு நாடு, அதன் தங்க கடற்கரைகள், தேயிலைத் தோட்டங்கள், பழங்கால கோயில்கள், காலனித்துவ நகரங்கள், மூடுபனி நிறைந்த மலைப்பகுதிகள் மற்றும் செழிப்பான வனவிலங்குகளுக்காகப் பாராட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் 833 மைல் நீளமுள்ள கடற்கரை, யானைகள் மற்றும் சிறுத்தைகளின் தாயகமான யால தேசிய பூங்காவில் வனவிலங்கு சவாரிகள் போன்றவற்றையும் எடுத்துக்காட்டியுள்ளது.
இந்தியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள இந்த கண்ணீர்த்துளி வடிவ தீவு அனைத்தையும் கொண்டுள்ளது என்றும் பிக் 7 ட்ராவல் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் பத்து இடங்களையும் பிடித்த தீவுகள் வருமாறு-
- சிறிலங்கா
- மோரியா, பிரெஞ்சு பொலினேசியா
- சோகோத்ரா, யேமன்
- மடீரா
- கலாபகோஸ், ஈக்வடார்
- கிரேட் எக்ஸுமா, பஹாமாஸ்
- சீஷெல்ஸ்
- அசில் தீவு, அயர்லாந்து
- கோ லிப், தாய்லாந்து
- மிலோஸ், கிறீஸ்