மேலும்

மாதம்: October 2026

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை- வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படும்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சாலே இன்று மீண்டும் சிஐடியிடம் ஒப்படைக்கப்படுகிறார்

சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்  ஒப்படைக்கப்படவுள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை சிறிலங்காவுக்கு விநியோகிக்கும் புரிந்துணர்வு உடன்பாடு

இந்தியாவிலிருந்து சிறிலங்காவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று   கையெழுத்திடப்பட்டுள்ளது.

கைதிகளுக்கான சீருடையில் ஞானசார தேரர் – சிறைத்தண்டனை ஆரம்பம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட, பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று  உத்தரவிட்டது.

சவுதி அரேபிய சிறையில் அனோஜன் மீது தாக்குதல் – உயிருக்கு ஆபத்து என அச்சம்

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு ஆபத்து

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம், சிறுபான்மை சமூகங்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படும் கடுமையான அபாயத்தை உருவாக்கும் என சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு (OMCT) எச்சரித்துள்ளது.

கடத்தல் சம்பவம் குறித்து கருணாவிடம் சிஐடி நீண்ட விசாரணை

கருணா  எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம்,  கடத்தல் சம்பவம் ஒன்று தொடர்பாக, சிறிலங்கா காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

திலீபன் சிலை அகற்றப்பட்ட விவகாரம்- தேசிய சமாதானப் பேரவை எச்சரிக்கை

சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையும், யாழ்ப்பாணத்தில் திலீபன் சிலை அகற்றப்பட்டதும்  ஒட்டுமொத்த சமூகங்களையும் பாதிக்கும் குறைகளாக மாறும் அபாயத்தைக் கொண்டுள்ளன என்றும் தேசிய சமாதானப் பேரவை எச்சரித்துள்ளது.

முதல் 8 மாதங்களில் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 61.6 சதவீதம் அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சிறிலங்காவின் எரிபொருள் இறக்குமதிக்கான மொத்த செலவினம், 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு 61.6 சதவீதம் அதிகரித்து, 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.