மேலும்

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – சிங்கள ராவய எதிர்ப்புப் போராட்டம்

இறுதிக்கட்ட போரின் போது படுகொலை செய்யப்பட்ட மக்களை  நினைவுகூரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு,  கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று மாலை இடம்பெற்றது.

நேற்று மாலலை 5 மணியளவில், சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் இந்த  நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. அதையடுத்து கடல்நீரில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில்,  முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

இதில் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்னால் நேற்றுக் காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

இதனிடையே வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று மாலை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிங்கள ராவய அமைப்பின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால், அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், காவல்துறையினரால் அவர்கள் தடுக்கப்பட்டனர்.

இதன்போது சிறிலங்கா காவல்துறையினருக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதமும் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *