மேலும்

ஜெனிவாவுக்கான புதிய சிறிலங்கா தூதுவர் பதவியேற்பு

ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகம் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஏனைய அனைத்துலக அமைப்புகளுக்கான சிறிலங்காவின் புதிய நிரந்தர பிரதிநிதியான சுமித் தசநாயக்க, பொறுப்பேற்றுள்ளார்.

அவர் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டாட்டியானா வலோவயாவிடம் (Tatiana Valovaya) தனது நற்சான்றிதழ்களை வழங்கினார்.

இதன்போது, தனது  தலைமையிலான பணியகத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்களில் தொடர்ந்து ஒத்துழைக்குமாறு சிறிலங்கா தூதுவரை,  டாட்டியானா வலோவயா கேட்டுக் கொண்டுள்ளார்.

அனுபவமிக்க இராஜதந்திரியான சுமித் தசநாயக்க 1998 ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா வெளிவிவகாரச் சேவையில் பணியாற்றிய வருகிறார்.

2021 முதல் 2024 வரை அவர் பிரேசிலுக்கான சிறிலங்காவின் தூதுவராக பணியாற்றியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *