மேலும்

அமெரிக்கத் தூதுவரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்பு பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவருமான செர்ஜியோ கோரை (Sergio Gor)  சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

புதுடெல்லியில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், செயற்கை நுண்ணறிவு தாக்க  மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, நேற்று புதுடெல்லியை சென்றடைந்தார்.

அங்கு அவர் இன்று முக்கிய சந்திப்புகளில் பங்கேற்கிறார்.

இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தலைவர்களையும், மாநாட்டுக்கு வருகை தந்துள்ள ஏனைய நாட்டுத் தலைவர்களுடனும், சிறிலங்கா அரச தலைவர் முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக அரச தலைவர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *