ஐரோப்பிய ஒன்றிய குழுவுடன் சுமந்திரன், சாணக்கியன் சந்திப்பு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் இருவர் கலந்துரையாடியுள்ளனர்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய- பசுபிக் பிராந்திய பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பவுலா பம்பலோனி (Paola Pampaloni) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான குழுவின் தலைவர் கார்மென் மொரேனோ (Carmen Moreno) ஆகியோருடனான இந்தச் சந்திப்பில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், பயங்கரவாத தடைச்சட்டத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான எதிர்ப்பு, மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

