மேலும்

12 பேருக்கு மரணதண்டனை – கம்பஹா மேல்நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர், கொலை செய்யப்பட்ட வழக்கில்,  12 பிரதிவாதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் நான்கு பேருக்கு,  5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட  23 பேரை,  விடுவித்து, கம்பஹா நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று  தீர்ப்பளித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி சிறிலங்காவில் அரசாங்கத்துக்கு எதிராக  இடம்பெற்ற வன்முறைகளின் போது, நிட்டம்புவ பிரதேசத்தில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரினால் 42 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கம்பஹா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நீண்ட வழக்கு விசாரணைகளின் முடிவில்,  மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *