மேலும்

வெனிசுவேலா நிலைமைகள் குறித்து சிறிலங்கா ஆழ்ந்த கவலை

வெனிசுவேலாவில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து சிறிலங்கா அரசு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன்,  நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், பலத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல், தலையிடாமை, அனைத்துலக மோதல்களை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற, அனைத்துலக சட்டத்தின் கொள்கைகளையும், ஐ.நா. சாசனத்தையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை சிறிலங்கா வலியுறுத்துகிறது,

வெனிசுவேலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மற்றும் பிராந்தியத்தின் உறுதித்தன்மைக்கு சிறிலங்கா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

மேலும்,பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் பேச்சுக்கள் மூலம் அமைதியான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து தரப்பினரையும் அழைக்கிறது.

இந்த முக்கியமான கட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபையும் ஐ.நா. பாதுகாப்பு சபை போன்ற அதன் அமைப்புகளும் இந்த விடயத்தை கையிலெடுத்து, வெனிசுவேலா மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் இறையாண்மை உரிமைகளைக் கருத்தில் கொண்டு அமைதியான தீர்வை நோக்கிச் செயற்படுவது முக்கியம்,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *