மேலும்

மாதம்: December 2025

நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தம்- கிராம அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

பேரிடர் நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக கிராம அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

700 தொன் நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலை வந்தது இந்திய கப்பல்

சுமார் 700 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் காரியல் என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தை அடைந்துள்ளது.

மீட்பு நடவடிக்கையில் படையினரை இரட்டிப்பாக்கியது சிறிலங்கா இராணுவம்

டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கம் படையினரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு கொடைகளை கண்காணிக்க சிறப்புக் குழு நியமனம்

டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளால் கொடையாக வழங்கப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களை, திறம்பட நிர்வகிப்பதை மேற்பார்வையிடுவதற்கான சிறப்புக் குழுவை சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பியது இஸ்ரேல்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.

பலாலியில் நிவாரணப் பொருட்களுடன் தரையிறங்கியது அமெரிக்க விமானம்

அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானம் ஒன்று  உதவிப் பொருட்களுடன்  இன்று காலை  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

85 மெ.தொன் நிவாரணப் பொருட்களுடன் வந்தது சீன விமானம்

டிட்வா புயலினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக, சீனா 85 மெட்ரிக் தொன்  நிவாரணப் பொருட்களை சிறிலங்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அமெரிக்காவின் 60 மரைன் படையினரும் சிறிலங்கா வந்தனர்

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவில் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த 60 மீட்புப் படையினர் கொழும்பு வந்துள்ளனர்.

கிளிநொச்சியில் பாலத்தை புனரமைக்கும் இந்திய இராணுவ அதிகாரிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் டிட்வா புயலினால் சேதம் அடைந்துள்ள பாலத்தைப் புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசின் 300 மெ.தொன் உதவிப்பொருட்கள் சிறிலங்காவிடம் கையளிப்பு.

சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் தமிழக அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட 300 மெட்ரிக் தொன் அவசர நிவாரணப் பொருட்கள் நேற்று சிறிலங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.